விழாவின் தொடக்கமாக எஸ் ஆர் ஜி மினி மஹால் உரிமையாளர் காந்திமதி சம்மந்தம் மற்றும் வடலூர் காசியம்மாள் கலியமூர்த்தி, பூங்குழலி அறவாழி, கஸ்தூரி சுந்தர் ராஜா, அருள்ஞான அருள் பிரகாசம் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
முத்துக்குமார் அவர்களால் ஆகவல் பாராயணம் பாடப்பட்டது தொடர்ந்து ராஜாராமான் அவர்கள் அருட்பா இசை சொற்பொழிவு நடைபெற்றது, மேலூம் வள்ளலார் தமிழ் பண்பாட்டு மைய செயலாளர்கள் அருள் பிரகாசம் மற்றும் அறவாழி ஆகியோர் வரவேற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார், தாமரை இதழின் ஆசிரியர் மகேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
வடக்குத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன், சிதம்பரம் சமூக சிந்தனையாளர் பேரவை தலைவர் ராகவேந்தர், காட்டுமன்னார்கோவில் நல்லாசிரியர் விருந்தாளர் புலவர் முருகு சிவம், wetry அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமார் மற்றும் வள்ளலார் தமிழ் பண்பாட்டு மைய துணை தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், தாமரை இதழ் ஆசிரியர் மகேந்திரன் அவர்கள் நூல் வெளியீடு செய்ய அதனை மக்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு இயக்க தலைவர் கே எஸ் சம்பந்தம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவை தொடர்ந்து வாழ்த்துரையை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன் மற்றும் பேராசிரியர் வினோதினி மற்றும் கோ.வி. ஜெயராமன் ஆகியோர் வழங்கினார், நிகழ்ச்சியின் இறுதியில் வள்ளலார் தமிழ் பண்பாட்டு மைய பொருளாளர் விஜய பாரதி கோபாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment