ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் “பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும். நமது இந்திய நாட்டில் பெண் குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு 24.01.2015 அன்று பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் "தேசிய பெண் குழந்தைகள் தினம்" அன்று துவக்கி வைக்கப்பட்டது.
2022-2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுக்கவும், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகச் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்துபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் பொருட்டு Pre.Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT Act) . குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மரு.சாரா செலின் பவுல் அவர்கள், சமூக நலத்துறை அலுவலர் கோமதி அவர்கள், அரசு மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment