கடலூர் மாவட்டம் 172 ஆண்டுகள் பழமையான சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு கிழக்குப் பகுதி சுவற்றின் உயரம் குறைவாக இருந்ததால் அணைக்கட்டுப் பகுதியில் சில விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்தது. இதனையடுத்து இந்த கிழக்குப் பகுதி ஆபத்தானசுவற்றின் உயரத்தைத் தகுந்த பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தி அதிகரிக்க வேண்டும், பழமையான அணைக்கட்டை பராமரிப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளியாகியது.
இதன் அடிப்படையில் தற்போது அணைக்கட்டு சுவற்றின் உயரம் அதிகப்படுத்தும்படி அணைக்கட்டு சுவற்றின் மேல் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் இரும்பு வேலி அமைக்கப்பட்டு, முழுமையாக வர்ணம் பூசப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி கிராம மக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment