கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த குறைகள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் வேளாண்மை மற்றும் அனைத்து துறை முதன்மை அதிகாரிகளும் கேட்டறிந்தனர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.
விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை சாத்தியக்கூறின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும் எனவும், விவசாயிகள் வாய்க்கால் தூர் வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பதிலை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பி வைத்திட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது. '
முன்னதாக இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர்(ம.தி), ஏ.ஜெ. கென்னடி ஜெபக்குமார் அவர்கள் இல்லம் தேடி வேளாண் கிசான் கடன் அட்டைகள் வழங்குதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். HDFC வங்கி மேலாளர் அவர்கள் கிராம வாரியாக விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது எனவும், அனைத்து இ.சேவை மையங்களிலும் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளவும் தகுதியின் அடிப்படையில் கிசான் கடன் அட்டையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு விருத்தாச்சலம், வேளாண் அறிவியியல் நிலைய விஞ்ஞானி முனைவர்.நடராஜன் அவர்கள் நெல் வயல்களில் வளரும் பாசியை கட்டுப்படுத்துவது பற்றி எடுத்து கூறினார்.
பின்னர் பூச்சியியல் துறை விஞ்ஞானி முனைவர். செங்குட்டுவன் அவர்கள் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவினை கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக பலவகை வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் இ.வாடகை செயலி மூலம் பயன்படுத்துவது குறித்து செயற்பொறியாளர்(வே.பொ) அவர்கள் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலவலர் ம.இராஜசேகரன் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சு.இரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment