கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் இறந்த பின்பு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாற்காக பதிவு செய்துள்ளார் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விபத்து ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்துள்ளார் பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இறப்பதற்கு முன் உடல் உறுப்புகளை தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ணகுமார் உடலுக்கு இன்றைய தினம் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர் பின்னர் அவரது உடல் கஞ்சமநாதன் பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment