வானதிராயபுரம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 October 2023

வானதிராயபுரம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வானதி ராயபுரம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் என்எல்சி இந்தியா  லிமிடெட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற என்எல்சி நிர்வாகம் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டிக் கொடுத்தது, இதன் திறப்பு விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் என்எல்சி சுரங்கம் அருகாமையில் உள்ள கிராமம் என்பதால் அடிக்கடி என்எல்சி இந்தியா நிறுவனத்தால் பாதிப்புகள் ஏற்படுகிறது குடிநீர் தேவைக்காக போர்வெல் அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டாலும் அவை அனைத்தும் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்க போடப்படும் வேடியினால் துண்து விடுவதாகவும் இதனால் வானதிராயபுரம் ஊராட்சி பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.


எனவே என்எல்சி இந்தியா நிறுவனம் கிராம வளர்ச்சிக்கான சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் போர்வெல் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் நிகழ்வில் துறை சார்ந்த என்எல்சி அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள்,கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன்,ஊராட்சி செயலர் பழனிவேல்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் வானதிராயபுரம் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/