சிறப்பு அழைப்பாளர்களாக மாநில நிறுவன தலைவர் இருதயம் வல்லரசு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் விழாவில் பேசுகையில் மக்கள் மேம்பாட்டு கழகம் கிறிஸ்தவர்களுக்காக தொடங்கப்பட்டது சமத்துவம் சகோதரத்துவம் கிறிஸ்தவர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் கிறிஸ்தவர்களின் வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளது எனவும் பல்வேறு அரசியல் கட்சியில் கிறிஸ்தவர்கள் இடம்பெற்று இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்கான தனிக்கட்சி எங்குமே இல்லை கிறிஸ்தவர்களின் நலன் காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்கள் மேம்பாட்டு கழகம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக வடலூர் கும்பகோணம் சாலையில் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது, நிகழ்ச்சியில் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பு தலைவர் G.இருதயசாமி தமிழக காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஏ எஸ் சந்திரசேகரன், நியூ தாட் அரிமா சங்க சாசன தலைவர் MK. பார்த்திபன், பரமேஸ்வரி திருமண மண்டப உரிமையாளர் T.P. இளையபெருமாள், அரசகுழி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் கிரகோரி, மக்கள் மேம்பாட்டு கழகத்தின் மாநில நிர்வாகிகள் C.ஆரோக்கியதாஸ், ராயப்பன், மோரிஸ், கிறிஸ்டோபர் ஸ்டாலின், A. ஆரோக்கியதாஸ், பீட்டர் லியோனார்டு, இருதயராஜ், ஜான் பீட்டர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் புதுவை ராணி ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment