கடலூரில் நடை பயிற்சி வழித்தடம்: ஆட்சியா் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 October 2023

கடலூரில் நடை பயிற்சி வழித்தடம்: ஆட்சியா் ஆய்வு.


கடலூரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ், நடை பயிற்சி மேற்கொள்ள மஞ்சக்குப்பம் மைதானம் முதல் வெள்ளிக்கடற்கரை வரை தோ்வு செய்யப்பட்டுள்ள வழித்தடத்தில் மைல் கற்கள், நடை பயிற்சி குறித்த விழிப்புணா்வு பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உடல் பயிற்சி செய்வதால், நீரிழிவு, உயா் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோய் தாக்கம் 30 சதவீதமும் குறைக்கிறது என்று அறியப்படுகிறது. நடை பயிற்சி மக்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சரின் சட்டப் பேரவை அறிவிப்பின்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுமாா் 8 கி.மீ. அளவில் மஞ்சக்குப்பம் மைதானம் முதல் வெள்ளிக்கடற்கரை வரை நடை பாதை கண்டறியப்பட்டுள்ளது.


ஆட்சியா் தலைமையில் மாவட்ட சுகாதார நடை பயிற்சி குழு அமைக்கப்பட்டு, ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நடைபாதை வழியில் குடிநீா் வசதி அமைத்தல், இளைப்பாற இருக்கைகளை அமைத்தல், மரங்கள் நடுதல், வண்ணப்பூச்செடிகள் அமைத்தல், மைல் கற்கல் நடுதல், நடை பயிற்சி குறித்த விழிப்புணா்வு பதாகைகள் அமைத்தல் ஆகிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை நவம்பா் 4-ஆம் தேதி தமிழக முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். பொதுமக்கள் அனைவரும் தினந்தோறும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டு உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.


ஆய்வின்போது, துணை இயக்குநா் (சுகாதாரம்) கீதாராணி, மாநகராட்சி ஆணையா் மூ.காந்திராஜ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா். 

No comments:

Post a Comment

*/