கடலூர் மாவட்டம் வடலூர் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் நன்கு முனை சந்திப்பு முதல் நெய்சர் வரை உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக 10 மேற்பட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிர் சேதங்கள் பல நிகழ்ந்ததுள்ளது இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் சாலையோரங்களில்இருபுறமும் உள்ள கடைகளில் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வடலூர் நகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக வடலூர் முதல் நெய்சர் வரை நெடுஞ்சாலை ஓரங்களில் கடைக்காரர்களால் கடைக்கு முன்னே மண்ணடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகள் அகற்றப்பட்டுள்ளது இதனால் மழைக்காலங்களில் வேன் நிறுத்துமிடம் அருகே அதிக அளவில் தேங்கி நிற்கும் மழை நீர் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள சிறு வாய்க்கால் வழியாக வெளியே சென்றடையும் இதனால் சாலையில் மழைநீர் தேங்காாமல் வடிந்து ஓடும்.
இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றாலும் தொடர்ந்து கடைக்காரர்கள் கடைக்கு முன்னே சீட் மற்றும் ஷட் அமைத்து செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment