ஸ்ரீமுஷ்ணம் அருகே சிறுவன் ஓட்டியகார் இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு. மற்றொருவர் சிகிச்சையில் உள்ளார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 October 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே சிறுவன் ஓட்டியகார் இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு. மற்றொருவர் சிகிச்சையில் உள்ளார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு கிராம மேம்பாலப்பகுதியில் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி தனியாக ஒரு இருசக்கர வாகனத்திலும் மற்றும் இவரது  நண்பர் அப்துல் ஹமீத் தனியாக ஒரு இருசக்கர வாகனத்திலும் சென்ற போது  சிறுவன் ஓட்டி வந்த சொகுசு கார் எதிரே வந்த  இரண்டு இருசக்கர வாகனத்திலும் மோதியது. மோதியதுடன் நிற்காமல் சற்று தூரம் சென்று பனை மரத்தில் மோதி நின்றது.


இதில் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடுமையான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அப்துல் ஹமீதுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக பொன்னுசாமியை கடலூர் கொண்டு செல்லும்போது அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 


இது குறித்து போலீசார் காரை ஓட்டிச் சென்ற சோழத்தரத்தை சேர்ந்த சிறுவன் அபிக்கை  விசாரணை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/