எம்.ஆர்.கே சர்க்கரை ஆலைத் தலைவர் தனக்கு ஐந்தாண்டுகள் ஒத்துழைப்பு வழங்கிய விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 October 2023

எம்.ஆர்.கே சர்க்கரை ஆலைத் தலைவர் தனக்கு ஐந்தாண்டுகள் ஒத்துழைப்பு வழங்கிய விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் தலைவராக அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், துணைத் தலைவராக விநாயகமூர்த்தி கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 16ந்தேதி பதவியேற்றுக்கொண்டார்கள்.


இந்நிலையில்  பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மூலம் பிரச்னைகளை களைந்து தலைவரும், துணைத்தலைவரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை வளர்ச்சிக்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் இவர்களின் பதவி நிறைவுக்காலம் வருகின்ற 16ந்தேதி, அக்டோபர், 2023 அன்று ஐந்தாண்டுகளுடன் நிறைவடைகிறது. அதனைமுன்னிட்டு இவர்களுக்கு பாராட்டு மற்றும் பணிநிறைவு விழா ஆலையின் வளாக அரங்கினுள் நடைபெற்றது.


அப்போது ஆலை நிர்வாகம், இவருடன் பயணித்த நிர்வாககுழு இயக்குனர்கள், பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பான பணிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம், துணைத்தலைவர் விநாயகமூர்த்தி  ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இதனையடுத்து தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தலைவரும், துணைத்தலைவரும் நன்றி தெரிவித்தனர். 


சிறப்பான முறையில் ஆலையை நடத்திச் செல்வதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாக ஆலைத் தலைவர் கானூர்.கோ. பாலசுந்தரம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தங்க.ஆனந்தன், குணசேகரன், முத்துசாமி, பேபி லதா, ராஜலட்சுமி, கலைச்செல்வி, இளஞ்செழியன், மதியழகன், பால மணிகண்டன், சிவகுமார், செல்வக்களஞ்சியம், ஆதிமூலம், சக்திவேல் ஆகிய நிர்வாக இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர் ஆலையின் மேலாண் இயக்குனர் சதீஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

No comments:

Post a Comment

*/