தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வாச்சாத்தி வழக்கின் வரலாற்று வெற்றியை, அமைப்பின் 31 ஆண்டு கால சட்டப் போராட்டத்தையும், மக்கள் மன்றத்தில் நடந்த போராட்டத்தையும், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் விவரங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடலூர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில்.. தவிச ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.பி.தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜு, ஆர்.சிவகாமி, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் எம்.மணி, வடலூர் நகர செயலாளர் ஆர்.இளங்கோவன், சிஐடியூ கே.சீனிவாசன், பி.அழகுமுத்து, விவசாய சங்க தலைவர்கள் டி.ஆர்.ராமலிங்கம், கே.சுப்பிரமணியன், எஸ்.குமரவேல், கே.சேகர், எம்டி.சண்முகம் மற்றும் பி.மணிகண்டன், தங்கரத்தினம் சிவராமன், கோமேதகவேல், முருகையன், மணி, விமல். ராகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பங்கேற்புடன் இரவு 8.30 மணி வரை பிரச்சாரம், தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இறுதியாக குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நிறைவுற்றது.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment