கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டெங்கு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அப்பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார் .
மேலும், பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்ஆய்வின் போது மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment