அவரது ஆர்வத்தை பார்த்து – கடலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரான அவரது தந்தை வெங்கடேசன் அவருக்கு தொலைநோக்கி விண் ஆய்வு உபகரணங்களை வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்தினார்.மாணவர் அனேஷ்வர் கடலூரின் சில்வர் பீச் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு 56 எரிகற்களை தேடி எடுத்து சோதனை செய்து அவை விண்ணிலிருந்து விழுந்த எரிகற்கள் என்பதை நிரூபித்து அறிமுகம் செய்தார்.
சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் (IASC) மற்றும் ஹவாயின் பான் – ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்க நாசா (NASA) வுடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனேஷ்வரை இணைத்துக் கொண்டு அவருக்கு அங்கீகார பாராட்டு சான்றிதழ் வழங்கியது.சர்வதேசவான் ஆய்வு குழுமம் (International Astronomical Union) அவரை உறுப்பினராக அங்கீகரித்தது. மாணவர் வெ. அனேஷ்வர் கடலூரில் விழுந்த 56 எரிகற்களுடன் (Meteoroids) ஏழு விண்கற்களையும் (சிறுகோள்கள்) கண்டு பிடித்து – ஹார்டின் – சிமன்ஸ் பல்கலைகழகத்தின் (டெக்சாஸ்) விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார்.
அவர் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வுமையம் (TYSRO) எனும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி சகமாணவர்களிடையே விண்வெளிஆய்வு குறித்த ஆர் வத்தையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்ட ஆட்சியர் மாணவன் வெ. அனேஷ்வரை நேரில் அழைத்து பாராட்டினார்.
No comments:
Post a Comment