ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஏவுகணை நாயகன், பசுமை புரட்சியின் தந்தை APJ அப்துல் கலாம் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மந்தார குப்பத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் சிறார்கள் அமர்வதற்கான நாற்காலிகளும் எழுதுபொருள்களும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழங்கப்பட்டது, இதனை திருமதி பர்வீன் ஷர்மிளா மாவட்ட மகளிர் அணி அவர்கள் முன்னெடுத்தார்கள்.
மாவட்ட தலைவர் ஏ ஞானராஜ், தலைமை தாங்கினார், மண்டல தலைவர் தேவகுமார் முன்னிலை வகித்தார், மாவட்டச் செயலாளர் சத்யா ஆனந்தன் பொருளாளர் மணிவண்ணன் நெய்வேலி தொகுதி தலைவர் ஜானி மாநில ஊரக வளர்ச்சி பிரிவு துணைச் செயலாளர் கிங்ஸ்டர், மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாக்யராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062
No comments:
Post a Comment