பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் / கட்டடங்கள் மீது அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 October 2023

பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் / கட்டடங்கள் மீது அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரகப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள், சாலையின் மையப் பகுதிகள் (Center Median) பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் / கட்டடங்கள் மீது அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. 

விளம்பர பலகை, பேனர்கள் வரையறுக்கப்பட்ட இடங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட அளவுகளில் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று வைக்கப்பட வேண்டும். உரிய அங்கீகாரமின்றி வைக்கப்படுகின்ற விளம்பர பலகைகள் / பேனர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது. சில சமயங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பாகவுள்ளது. 


எனவே, முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். மேலும், உரிமம் பெறாமலும்/ உரிமக் காலம் முடிவடைந்த நிலையிலும் உள்ள விளம்பர பலகை, பேனர்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றத் தவறினால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அவற்றை அகற்றி தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து அதற்குறிய செலவுத்தொகை வசூலிக்கபடுமென மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*/