மேலும் கடை விளம்பரத்திற்காக வைக்கப்படும் விளம்பர தட்டிகள் அனைத்தும் சாலை ஓரங்களில் வைக்கப்படுவதால் கனரக வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை பார்க்கிங் செய்வதற்கு இடையூறாக உள்ளது மேலும் அவர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தும் பொழுது சாலை குருகளாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் முந்தி செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத கடைக்காரர்கள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் முகசொலிப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் சீட் போடுவதற்காக கீழே அமைக்கப்பட்ட இரும்பு துளையிட்ட காண்கிரிட் போட்டு புதைக்கப்பட்ட ஆங்கில்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக விட்டு சென்றதால் மீண்டும் அதனை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் இரும்பு ஆங்கில்களை கொண்டு சீட்டு அமைத்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வரும் கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதித்தால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்று பொதுமக்கள் கூறுகின்றனர், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி கடை தெரு பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் சாலையில் மிகவும் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது இது போன்ற சமயத்தில் ஆக்கிரமிப்புகளை செய்து வருவது விபத்துக்களை அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதால் மிண்டும் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகளால் உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment