கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் கடைக்கு பிரியாணி வாங்க சென்ற வாலிபர்கள் கடனாக பிரியாணியை கேட்டுள்ளனர், இதற்கு கண்ணன் கொடுக்க மறுத்ததால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, பின்னர் கடையில் நடந்த சம்பவம் குறித்து கண்ணன் காவல்துறையில் புகார் செய்ததை எடுத்து கண்ணனின் கடைக்கு மறுநாள் வந்த வாலிபர்கள் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் கண்ணன் மற்றும் பிரியாணி கடையில் வேலை செய்யும் ஊழியர்களை தாக்கம முயன்றனர். இந்நிலையில் மீண்டும் இரண்டு மாதம் கழித்து திடீரென கண்ணன் கொலை செய்யப்பட்டதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்குமா அல்லது வேறு யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெய்வேலி இயங்கி வந்த பிரபல ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment