வடலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடரும் வாகன விபத்துக்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 October 2023

வடலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் தொடரும் வாகன விபத்துக்கள்.

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் ( 73) வடலூர் நெய்சர் கம்பனி ஓய்வு பெற்ற தொழிலாளியான இவர்  தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை ஊருக்கு அனுப்புவதற்கு தனது காரில் அழைத்துக் கொண்டு வடலூர் பேருந்து நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் அவர்களை பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்ப முற்பட்ட பொழுது வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களால் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது கார்  மோதியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சாலை இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தொடர் விபத்து ஏற்படுவது வடலூர் பகுதியில் தொடர்கதையாகி வருகிறது எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/