தமிழககுரல் செய்தி எதிரொலியால் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 October 2023

தமிழககுரல் செய்தி எதிரொலியால் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள்.


கடலூர் மாவட்டம் கருங்குழி அருகே ஈசா ஏரி உள்ளது இந்த ஏரியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் செல்ல முடியாமல் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளும் ஏரியில் மண்முட்டுக்களும் சூழ்ந்து காணப்பட்டது, இந்நிலையில் இது குறித்த செய்தி தமிழககுரல் இணையதளத்தில் அண்மையில் வெளியானது இதனைத் தொடர்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்கால்கள் ஒட்டி உள்ள பகுதிகளில் அளவீடு செய்து கல் அமைக்கும் பணியை மேற்கொண்டது.

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் என்எல்சி நிர்வாகம் திடமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் விரைவில் ஏரியை தூர்வாரி விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது பின்னர் விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிக்கையில் என்எல்சி நிர்வாகத்திடம் வாய்க்காலை அகலப்படுத்தி ஏரியை தூர்வாரக் கோரி அறிவுறுத்தி உள்ளோம் இதனைத் ஏற்றுக்கொண்ட என்.எல்.சி நிர்வாகம் விரைவில் வாய்க்காலை அகலப்படுத்தி  ஏரியை தூர்வாரி விவசாய பயன்கள் பாட்டிற்காக தண்ணீரை தருவது என உறுதி அளித்தனர் என்று தெரிவித்தனர்.


இதனை அடுத்து கருங்குழி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செய்தி வெளியிட்ட தமிழக குரல் செய்தி நிறுவனத்திற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment

*/