சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் ஏற்கனவே இருந்த எம்ஜிஆர் சிலை பழுதடைந்த நிலையில் புதிய எம்ஜிஆர் சிலை பொருத்தும் பணி புவனகிரி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்று வருகிறது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 October 2023

சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் ஏற்கனவே இருந்த எம்ஜிஆர் சிலை பழுதடைந்த நிலையில் புதிய எம்ஜிஆர் சிலை பொருத்தும் பணி புவனகிரி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் நான்கு முனைச் சாலைகள் சந்திக்கும் இடத்தில் பல ஆண்டுகளாக முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை இருந்து வருகிறது. இந்த சிலை மழை மற்றும் வெயில் போன்ற பல்வேறு இயற்கை காரணங்களால் சேதம் அடைய ஆரம்பித்தது. 


இந்நிலையில் இந்த சிலையை புதிதாக அமைக்க வேண்டும் என அதிமுகவினர் அனைவரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவனிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன்  ஏற்பாட்டின் படி புதிய எம்ஜிஆர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி பழைய எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டு அதே வடிவத்தில் புதிய எம்ஜிஆர் சிலை பொருத்தப்பட்டது. வருகின்ற 17ஆம் தேதி அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இதற்கான திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. 


இதனை புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியப் பெருந்தலைவருமான சி.என். சிவப்பிரகாசம் முன்னிலையில் பணிகள் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன. இதனை வரவேற்ற அதிமுகவினரும், பொதுமக்களும் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவனுக்கு தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இப்பணிகளின் போது அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/