இந்நிலையில் மோட்டார் பம்ப் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு தினமும் நீர் ஏற்றப்படடும் குடிநீர் பின்னர் வால்வு மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தினமும் திறந்து விடப்படுகிறது, குடிநீர் வாட்டர் டேங்க் நிரம்பி அதில் இருந்து வழிந்து வீணாகி வரும் குடிநீர் காட்டு வேகக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியிலூம் பள்ளிக்கு அருகே உள்ள கழிவறை சுவர்களிலும் தெரித்து வருவதால் சுவர்கள் அனைத்திலும் அரிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.
சத்திரம் கொள்ளுகாரன்குட்டை முக்கிய சாலையின் அருகாமையில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டி என்பதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் தெறித்து வருகிறது பல்வேறு பகுதிகளில் குடிநீரின்றி மக்கள் தவித்து வரும் நிலையில் பல ஆயிரம் லிட்டர் குடிநீரை கவனக்குறைவால்
வீணாக்கி வரும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment