மேலும் பேருந்து ஓட்டுநர்கள் இது குறித்து தெரிவிக்கையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடைபெற்ற வருவதால் பேருந்தை சாலையோரங்களில் நிறுத்தி வருகிறோம் பேருந்து நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை மேலும் எம் ஆர் கே பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது இருசக்கர வாகனங்களை விட்டுச் செல்வதால் பேருந்தை திருப்ப முடியாமல் தினறி வருகின்றனர்.
மேலும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவதால் வார சந்தைக்கு வரும் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் வாகனத்தை விட்டுவிட்டு சந்தைக்கு சென்று வருகிறனர் இதனால் சனிக்கிழமைகளில் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை தொடர்கதையாகி வருகின்றது இதனால் குறிஞ்சிப்பாடி வடலூர் சாலையில் அயனேரி வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அனிவகுத்து செல்வதால் சனிக்கிழமைகளில் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் இடையூறாக நிறுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு அபரதம் விதித்தால் வாகன ஓட்டிகள் பேருந்து நிலையத்திற்குள் வாகனத்தை நிறுத்த மாட்டார்கள் எனவே போக்குவரத்து போலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment