வடலூரில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 October 2023

வடலூரில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு.


வடலூர் கடைவீதிக்கு  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்த 4பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். வடலூர் என்எல்சி ஆபீஸர் நகர் முதல் தெருவை சேர்ந்த இளமுருகு மனைவி பிரேமலதா பிரேமலதா (45)இவரது. தாயார்  ஜெயந்திமாலா (62) வடலூரில் கடைவீதிக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு பால்கார காலனி (அருகில், வழியாக என்எல்சி ஆபீஸர் நகரில் உள்ள வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் அவரிடம் செட்டியார் வீதி எங்கு உள்ளது என கேட்டுள்ளனர் அதற்கு தெரியாது எனக்கூறி விட்டு சென்று விட்டார். பின்னர் சிறது நேரத்தில் பின்புறமாக  இருந்து கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை  பறித்து சென்றனர். இது குறித்து பிரேமலதா கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/