இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா ராமதாஸ் வரவேற்புரை ஆற்றினார், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இளையராஜா உமா மணிமாறன் இலக்கியா செல்வநாயகம் மணிமாறன் சுமதி ராதாகிருஷ்ணன் அம்சவல்லி ராஜேந்திரன் சுசிலா அன்பழகன் கலந்து கொண்டனர் மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதித்து இலவசமாக மருந்து மாத்திரை இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சி.குமார் மற்றும் திருஞானம் புதுமைசந்தானதாஸ் மாரியப்பன் ஆசைத்தம்பி கலியபெருமாள், ராம்குமார் ஆகியோர்கள் இணைந்து பள்ளியின் வளாகத்தில் பலன் தரக்கூடிய 200. மரக்கன்றுகளை நட்டு வைத்து பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவித்தனர்.

No comments:
Post a Comment