கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ருட்டி சாலை, வடலூர் நான்கு முனை சந்திப்பில் இருந்து இரயில்வே கேட் வரையில் உள்ள கடைகளுக்கு முன்புறம் மேடான பகுதியை அகற்றி மழைநீர் செல்ல ஏதுவாக அதற்கான பணிகள் தொடங்கியதை நகர மன்ற தலைவர் சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மேடான பகுதியில் உள்ள மண் அகற்றப்பட்டு சிறு வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்காமல் நிற்கும்.

No comments:
Post a Comment