வடலூர் அருகே ஹிட்டாச்சி இயந்திரத்தை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சக்கரம் மாட்டி ஹிட்டாச்சி இயந்திரம் கீழே இறங்கியதால் கும்பகோணம்- சென்னை சாலையில் ஒரு மணி நேரம் மேல் போக்குவரத்து பாதிப்பு.
கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பில் இருந்து ஹிட்டாச்சி இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு பண்ருட்டி நோக்கி வந்த லாரி பரவனாறு பாலம் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் லாரி டயர் மாட்டிக் கொண்டதில் ஹிட்டாச்சி இயந்திரம் கீழே இறங்கியதால் கும்பகோணம் சென்னை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனை அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து பாதையை மாற்றி பேருந்து இயக்கச் செய்தனர்.
பின்னர் ஹிட்டாச்சி மற்றும் லாரியை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

No comments:
Post a Comment