என்எல்சி சுரங்கத்தை ஒட்டியுள்ள கிராம விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் என் எல்.சி நிர்வாகம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 October 2023

என்எல்சி சுரங்கத்தை ஒட்டியுள்ள கிராம விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் என் எல்.சி நிர்வாகம்.


நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்து 720 எக்டேர் கணக்கு கணக்கில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்கள் மெல்ல மெல்ல கருகி வரும் அவல நிலை பாதிக்கபட்ட மக்களுக்கு செவி சாய்க்குமா? தமிழக அரசு, ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 50000 வரை செலவு செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை என்று கதறும் கருங்குழி பகுதி விவசாயிகள்!!!


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இங்கு  திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியின் போது ராட்சச குழாய்களை கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சி அதனை என்எல்சி சுரங்கம் அருகே உள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கு என்எல்சி நிர்வாகம் பரவனாறு மூலம் வாய்க்கால் அமைத்து அனுப்பி வருகிறது, இந்த தண்ணீரை கொண்டு சுமார் 2000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட என்எல்சி இந்தியா நிறுவனத்தை சுற்றி உள்ள கிராம மக்கள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் சுரங்கம் இரண்டு அருகாமையில் உள்ள கோட்டகம் ,கருங்குழி, கொளக்குடி ஆகிய பகுதிகளில் திடீரென்று  கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக விவசாயத்திற்காக  நீர் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இதனால் விவசாயிகள் பெரிதும் பாதித்து வருகின்றனர்.


சுரங்கம் இரண்டிலிருந்து வெளியேற்றப்படும்  நீரானது கருங்குழி அருகே உள்ள ஈசா பெரிய ஏரியில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து சிறு மதகுகள் மூலம் வயல்வெளிகளுக்கு பாய்ந்து வருகின்றது, மழைக்காலங்களில்  சுரங்கத்தினுள் உள்ள ராட்சச இயந்திரங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் அதிக அளவில் நீரை வெளியேற்றி  வரும் என்எல்சி நிர்வாகம் விவசாய தேவைக்கு என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் விவசாயத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இருப்பது கிராம மக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெளியேற்றப்பட்ட நீருடன் உளைக்கலந்த மண்  சேர்ந்து ஈசா ஏரிக்கு வந்தடைந்ததால் ஈசா ஏரி முழுவதும் மண் முட்டுக்களால் சூழப்பட்டு ஏறி முழுவதும் துந்து போய் உள்ளது மேலும் ஏரி முழுவதும் கோரை புற்கள் முளைத்தும் முள் செடிகள் முளைத்தும் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது, ராட்சச குழாய்கள் மூலம் ஈசா ஏரிக்கு நீரை அனுப்பி வந்த என்எல்சி நிர்வாகம் திடீரென நீரை நிறுத்தியதால் வாய்க்காலில் குறைந்த அளவு நீரே தற்பொழுது உள்ளது இதனால் சுரங்கம் அருகே உள்ள கிராமத்தினர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


ஈசா ஏரியிலிருந்து கருங்குழி பகுதியில் சுமார் 720 ஹெக்டேர் அளவில் சம்பா சாகுபடி தற்பொழுது நடைபெற்று வருகிறது  பி பி டி, சாரதா, கோ 50 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர் நாற்றங்கால் நடப்பட்டு இரண்டு, மூன்று மாதங்கள் ஆன நிலையில் நன்கு வளர்ச்சி அடையும் பருவத்தில் என்எல்சி நிறுவனம் விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுத்துள்ளது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக கருங்குழி பகுதியினர் தெரிவிக்கின்றனர்.


மேலும் என் .எல்.சி இந்தியா அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளை செய்து வரும் நிலையில் நெடுந்தொலைவில் உள்ள கிராமங்களில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அடிப்படை தேவைகளான சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றை பூர்த்தி செய்து வரும் என்எல்சி நிர்வாகம் சுரங்க பகுதி அருகாமையில் உள்ள எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


விவசாயத்திற்கு போதிய நீர் தரம் மறுக்கும் என்எல்சி நிர்வாகம் உடனடியாக விவசாய தேவைகளுக்கு உரிய தண்ணீர் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கருங்குழி கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் என்எல்சி நிர்வாகத்திடம் தெரிவித்து உடனடியாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யத போதிலும் அறிவுறுத்திய இரண்டு மூன்று நாட்களுக்கு கண்துடைப்புக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது மீண்டும் வழக்கம்போல் தண்ணீர்  அடைக்கப்பட்டது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.


மேலும் இதுகுறித்து  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் கிராம மக்கள் முறையிட்டும் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, வங்கி கடன் மூலமும் கந்து வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாய பணிகளை செய்து வருகிறோம் தற்பொழுது நெற்பயிர்கள் நாளுக்கு நாள் தண்ணீர் இன்றி காய்ந்து வருவதால் வாங்கிய கடனை கூட கட்ட முடியாத சூழலில் நிலை குலைந்து உள்ளோம் தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.


மேலும் என்எல்சி நிர்வாகம் வழக்கம் போல் விவசாயத்திற்கு தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஈசா ஏரியை தூர்வாரி விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வலியுறுத்தி உள்ளனர் 


தற்பொழுது உள்ள அரசு விவசாயத்திற்கு என்று தனி இலக்காவை ஒதுக்கி பல்வேறு திட்டங்களை விவசாயிகளின் வளர்ச்சிக்காக செய்து வரும் நிலையில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் வழங்க என்எல்சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கருங்குழி பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

*/