வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் 83 வது மாதாந்திர நிகழ்ச்சியாக சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா சிறப்பு கருத்து அரங்கம் ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
சேரன்மாதேவி குருகுல போராட்டத்தின் வரலாற்றை பார்ப்பனர் தமிழர் எனும் உணர்ச்சி காங்கிரசில் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த போராட்டம் என்பது பற்றி எல்லாம் விளக்கமாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார் மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழேந்தி திராவிட மணி பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல் வடலூர் கழக அமைப்பாளர் முருகன் மறுவாய் கழகத் தலைவர் திருநாவுக்கரசு கவிஞர் தீபக் எழுத்தாளர் அசோக் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலு ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர் முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment