இந்த வீட்டில் முகமது பிரோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு தங்கி வந்துள்ளார் இந்நிலையில் முகமது பிரோஸ் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவம் பாண்டிச்சேரி சென்றுள்ளார் இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லாததால் வீட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு வந்து பார்த்து முகமது பிரோஸிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டில் விளக்கு எரியவில்லை எங்கே இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு முகமது பிரோஸ் புதுச்சேரியில் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் கதவு லேசாக திறந்து இருப்பதை அறிந்து முகமது பிரோஸிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த முகமது பிரோஸ் உடனடியாக புதுச்சேரியில் இருந்து புவனகிரிக்கு விரைந்து வந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் புவனகிரி காவல் ஆய்வாளர் சரஸ்வதி உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலிசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொள்ளையர்களை போலிசார் வலைவீசி தேடி வந்த நிலையில் தடையவியல் நிபுணர்கள் சேகரித்த கைரேகையின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வடலூர் அருகே கருங்குழியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 22) உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகரை சேர்ந்த கார்த்தி மருதுபாண்டி (வயது 36), சத்யராஜ் (வயது 37) கீழ்புவனகிரி முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) ஆகிய நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளிடமிருந்து இருந்து 15 சவரன் தங்க நகை 350 கிராம் வெள்ளி ஒரு சிலிண்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு நான்கு பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- புவனகிரி செய்தியாளர் வீ.சக்திவேல்
No comments:
Post a Comment