விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியே செல்கிறது. போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 165 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது.
குறிப்பாக விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் வரை சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு உள்ள பகுதிகளில் சாலை பணிகள் முழுமை பெறவில்லை இதனால் கனரக வாகன மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர், இந்நிலையில் சேத்தியாதோப்பு முதல் வடலூர் வரையில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062
No comments:
Post a Comment