வடலூரில் லாரி மோதியதில் டியூஷன் சென்று வீடு திரும்பிய 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி, - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2023

வடலூரில் லாரி மோதியதில் டியூஷன் சென்று வீடு திரும்பிய 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி,


கடலூர் மாவட்டம் வடலூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் ஹஜ் முகமது மகன் முகமது ரித்வான் வயது 13 இவர் புது நகரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

வழக்கம்போல் இன்று மாலை வடலூர் பண்ருட்டி சாலை பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள டியூசன் சென்று சைக்கிளில் வீடு திரும்பிய பொழுது  காரைக்காலில் இருந்து மணலூர்பேட்டைக்கு கம்பி லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி வடலூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மாணவன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியானர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த வடலூர் காவல்துறையினர் முகமது ரித்வானின் உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/