புவனகிரி அருகே குமுடிமூலை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 October 2023

புவனகிரி அருகே குமுடிமூலை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள  குமுடிமூலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் புவனகிரி வருவாய் வட்டாட்சியர் சிவகுமார் வரவேற்றார், சிதம்பரம் சார் ஆட்சியர் (பொறுப்பு) ரவி தனித்துணை ஆட்சியர்( சா பா தி) ரமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் வருவாய் துறை சார்பில் 353 பயனாளிகளுக்கு ரூ 2,12,44,428 மதிப்பீட்டில் இலவச மனை பட்டாவிற்கான ஆணையினையும் 68 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ 7,49,000 மதிப்பீட்டில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகளும் தோட்டக்கலை துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ஐந்து வகையான பழச் செடிகள் மற்றும் வெண்டை விதைகள் கத்தரி செடிகள் ரூ 26, 850 மதிப்பீட்டிலும் வேளாண்துறை சார்பில் ஆறு பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள் கூட்டுறவு துறை சார்பில் விவசாய பயிர் கடனை 20 பயனாளிகளுக்கும் தாட்கோத் துறை சார்பில் பயனாளிகளுக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நான்கு பயனளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் எட்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் மொத்தமாக 555 பயணிகளுக்கு ரூபாய் 2,61,59,784 மதிப்பீட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் அவர்களுடைய பகுதியிலேயே நேரடியாக மனுக்களை பெற்று தகுந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும் வளரிலும் பருவத்தில் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத் தர வேண்டும் என்றும் பல்வேறு அறிவுரைகளை பெற்றோர்களுக்கு வழங்கினார்.


மேலும் முகாமில் பல்வேறு துறைகளில் வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கால்நடை பராமரிப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை சமூக பாதுகாப்பு துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரி நடராஜன் நன்றி கூறினார். 


- தமிழக குரல் செய்திகள் புவனகிரி செய்தியாளர் வீ.சக்திவேல்.

No comments:

Post a Comment

*/