நான் 25 வருஷமா ஒரே ஊர்ல வேலை செய்றேன் மாத்திடுவியா நீ!! கிராம இளைஞரிடம் ஒருமையில் பேசிய ஊராட்சி செயலர் என் பேர பயன்படுத்துனா நடக்கிறதே வேற. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 October 2023

நான் 25 வருஷமா ஒரே ஊர்ல வேலை செய்றேன் மாத்திடுவியா நீ!! கிராம இளைஞரிடம் ஒருமையில் பேசிய ஊராட்சி செயலர் என் பேர பயன்படுத்துனா நடக்கிறதே வேற.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆயிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இடக்குணாம்பட்டு பகுதியில் 300 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும்  பழுதடைந்த பதுகாப்பற்ற நிலையில் உள்ள தங்கள் பகுதி நியாய விலை கட்டிடத்தை சீரமைக்க கோரியும் அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான ஹரி கிருஷ்ணன் என்பவர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் ஒன்றை கடந்த  23.09.23 அன்று பதிவிட்டதாக கூறப்படுகிறது


புகாரின் மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் சம்பந்தப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்திய நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் புகார் குறித்த தகவல்களை அறிந்த ஆயிக்குப்பம் ஊராட்சி செயலர் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த இளைஞரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டும் தோனியில் ஒருமையில் பேசிய ஆடியோ  தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இது குறித்து அப்பகுதி இளைஞரான ஹரி கிருஷ்ணன் கூறுகையில், இடக்குணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் இவர் ஆயக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலராக கடந்த 25 ஆண்டுகளூக்கு மேலாக பணி மேற்கொண்டு வருகிறார். எங்கள் ஊரில் நியாய விலை கடை மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது மேலும் சுடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை  சுடுகாட்டிற்கு அருகே  புதர்கள் மண்டி கிடக்கும் செடிகள் வழியாக மயானத்திற்கு சென்று வருகிறோம்.


கிராமத்தில் உள்ள பொது கழிப்பிடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்தது போல் பெயிண்ட் அடிக்கப்பட்டு போலி பில் மூலம் கணக்கு காட்டப்படுகிறது புதிதாக கட்டப்பட்ட நாள் முதல் இதனால் வரை புது கழிப்பிடம் திறக்காமல் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது இதனால் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது, முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தெருக்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று நோய் தொற்று பரவும் நிலை நிலவி வருகிறது இது குறித்து ஆயிக்குப்பம் ஊராட்சி மன்ற செயலாளரிடம் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலூவலரிடமும் நாங்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் ஆயிகுப்பம் ஊராட்சி செயலர் சேகர் என்பவர் அதே பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருவதால் அவர் பல அரசு திட்டங்களை எங்கள் கிராமத்தில் முறையாக செயல்படுத்தாமல்  போலியான ரசீது தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பை அவபேரையும் ஏற்படுத்தி வருகிறார் இது மட்டுமல்லாது ஆயிக்குப்பம் ஊராட்சி பகுதிகளில் மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கப்பட்டும் வீடு கட்டாத கிடப்பில் பேடப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதனை பயனாளிகளே எடுத்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.


மேலும் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் இதற்கு உடந்தையாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர் மேலும் அவர் தனது செல்வாக்கை மற்றும் அதிகார பலத்தை வைத்து கிராமத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களை மிரட்டி வருகிறார் மேலும் கேள்வி எழுப்பும் நபர்களுக்கு எந்த ஒரு அரசு திட்டமும் செல்லாத வண்ணம் கிடப்பில் வைத்து விடுகிறார் இதனால் அவருக்கு எதிராக புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சப்பட்டு தங்களின் நிலையை வெளியே சொல்ல தயங்குகிறார்கள் என்று தெரிவித்தார்.


மேலும் ஆயிக்குப்பம்  கிராமத்தில் இன்று வரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தனி கட்டிடம் இல்லை மாணவர்கள் பயன்படுத்தும் நூலகத்தை இரண்டாக தடுத்து ஊராட்சி மன்ற அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர் இதனால் நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது மத்திய அரசின் திட்டமான தூய்மை பாரத திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் அனைத்தும் ஊராட்சி செயலரின் கவனக்குறைவால் கேட்பாரற்று துருப்பிடித்து நூலக கட்டிடத்திற்கு பின்புறம் புதர் செடிகள்  மத்தியில் கிடக்கிறது. 


எனவே இதுபோன்று அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய ஊராட்சி செயலாளரே அரசுக்கு எதிராகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது எங்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார் கிராமத்தின் அடிப்படை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பிய புகாரை தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment

*/