கடலூர் அனைத்து கட்சிகள் & குடியிருப்போர் பொதுநல அமைப்புகளின் சார்பில் கடலூர் ஆற்காட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டம் மேலாளர் எம். ஹரிகுமார் I.R.T.S அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது இதில் பரங்கிப்பேட்டை பயணியர் நலச் சங்கம் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கையான பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையை உயர்த்தி தர வேண்டியும் மற்றும் புதுச்சேரி வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதற்கும் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் தலைவர் அருள் முருகன். தாஹா மரைக்காயர் . ஷாஹுல் ஹமீது. மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு எம். ஹரிகுமார் I.R.T.S அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து கௌரவித்ததுடன் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment