கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளவீராணம் ஏரி தற்போது அதன் முழு கொள்ளளவான47.50அடி நிரம்பி இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் தற்போதைய ஏரியின் நிலையைப் பார்க்கும் விவசாயிகளோ கண்களில் கண்ணீருடன் கரையில் நின்று மனம் வெதும்பி வருகின்றனர். வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு மூலமாக தண்ணீர் வரும். மேலும் மழை வடிகால் மூலமும் தண்ணீர் கிடைக்கும்.
தற்போது கீழணை கொள்ளிடத்தில் நீர்மட்டம் படு பாதாளத்திற்கு சென்று விட்டதால் ஏரிக்கு வர வேண்டிய நீர்வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏரியில் இருந்த சொற்ப நீரும் தற்போது ஏரி பகுதிகளில் உள்ள ஐம்பதாயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழலில், இருக்கும் தண்ணீரை பாசன வாய்க்கால்கள் மூலம் சிறிது சிறிதாக பிரித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். விதைகால் பயிர் விவசாயமும் தண்ணீர் இன்றி கருக ஆரம்பித்து விட்டன.ஏரியின் தற்போதைய நீர்மட்டம் சுமார் 39 அடியில் இருந்து வருகிறது.
சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து சுமார் 40 கன அடிக்கு மேல் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. 17 கிலோமீட்டர் நீளமும், சுமார் ஐந்து கிலோ மீட்டர் அகலமும் கொண்டது .1200 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் மனித சக்தியால் உருவாக்கப்பட்ட இந்த ஏரி சரியான முறையில் தூர்வாரப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment