கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 11 வது வார்டில் அதிமுக கவுன்சிலர் ரங்கநாதன் தேர்தலுக்கு முன்பு நகரில் 11 வது வார்டில் நெடுஞ்சாலைப் பகுதியில் சிறந்த முறையில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன் பிறகு வெற்றி பெற்ற பின்பு வார்டு மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வரும் நிலையில் வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர முடிவு செய்தார். இந்நிலையில் தற்போது ரூ.19.50 லட்சம் மதிப்பில் புதிய மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி வார்டுப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வரும் அதிமுக கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் குடியிருப்பு வாசிகள் பொது மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் எனவும் 11-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாதன் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment