அனைத்து சமுகத்தினருக்கு ஒரே இடத்தில் பாரபட்சமின்றி பட்டா வழங்க கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 October 2023

அனைத்து சமுகத்தினருக்கு ஒரே இடத்தில் பாரபட்சமின்றி பட்டா வழங்க கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள  கருங்குழி கிராமத்தில் முகப்பு பகுதில் மிகவும் பிற்படுத்தப்பட்டடோர், சிறுபான்மையினர் ,பழங்குடி இருளர் மற்றும் அருந்ததியர் இவர்கள் அனைவரும் சமத்துமாக கடந்த 30 ஆண்டுகள் மேலேக சமுக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றவர்களை சாதி வன்மத்தோடும், சாதிக்குள்ளே மோதலை தூண்டுவிதாம்கவும் ஊராட்சி மன்ற தலைவி  ராஜேஸ்வரி அவர்களின் மகன்  கிஷோர் அவர்கள்  திடீரென்று  அதிகாரிகளின் உதவியோடு மின் இணைப்பைத் துண்டித்து தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் என்று பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டியும் பேசியும் உடனடியாக காலி செய்ய சொல்லி விரட்டியதாக கூறப்படுகிறது இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடலூர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அவர்களிடம் மனு அளித்தனர்.

மேலும் மணுவில் தாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் பலமுறை தலைமுறையாக வசித்து வருகிறோம் இந்நிலையில் கருங்குழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி என்பவரின் மகன் கிஷோர் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் எங்களை காலி செய்ய கோரி மிரட்டி வருகிறார் மேலும் எங்களுக்கு இன்று வரை மாற்று இடம் வழங்கப்பட வில்லை மேலும் இடத்தை காலி செய்தால் உறங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வருகிறோம் எனவே மாவட்ட ஆட்சியர் இதன் மீது கவனம் கூர்ந்து எங்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கி தமிழக அரசு சார்பில் வீடு கட்டி தர ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் ஜாதி மதங்களைக் கடந்து கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம் எனவே எங்களை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவு படுத்தாமல் அனைவருக்கும் ஒரே பகுதியில் பட்டா வழங்க கோரி குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*/