சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவில் புதிய எம்ஜிஆர் சிலை திறப்பு. நூற்றுக்கணக்கானபேர் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 October 2023

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவில் புதிய எம்ஜிஆர் சிலை திறப்பு. நூற்றுக்கணக்கானபேர் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. புவனகிரி மேற்கு  ஒன்றிய கழக செயலாளர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் புதிதாக அமைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச்  சிலையை திறந்து, மாலை அணிவித்து மரியாதை செய்தார். ‌


பின்னர் அவரால் கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை அதிமுகவினர் கொண்டாடினர். இதன் பின்னர் திமுக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய  ஆண்களும் பெண்களும் என பலநூறு பேர் தங்களை உற்சாகமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.


அருண்மொழிதேவன் எம்எல்ஏ பேசும் போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி மட்டுமே. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம், மகளிர் இரு சக்கர வாகன திட்டம், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டம், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான மடிக்கணினி தந்தது என இப்படி அனைத்தையுமே பெண்களுக்கான பாதுகாப்பு தரும் அரசாக அதிமுக அரசு இருந்தது.


அம்மாவுக்கு பிறகு வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தனது ஆட்சியில் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. என்ற வகையில் செயல்பட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை நன்கு புரிந்துகொண்டு அதனை தீர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி அவர்களை மகிழ்ச்சியடைய செய்தார் .அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். தமிழகமே தலை நிமிரக் கூடிய பொன்னான ஆட்சியை தந்தார்.


தற்போது திமுக கனிமொழி நடத்திய மகளிர் உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்ற சோனியா காந்தி உள்ளிட்ட பெண் தலைவர்கள், பெண் சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது காவல்துறையில் பெண் காவலர்களுக்கு நான்கில் ஒரு பங்கு மகளிர் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கான முக்கியத்துவத்தை மகளிர் காவல் நிலையம் மூலம் செயல்படுத்தியது  அதிமுக அரசின்  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று புகழாரம் சூட்டினார். அதற்கு பிறகு பேசிய பெண் தலைவர்கள் பேசும்போது பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம் இங்கு தமிழகத்தில் மட்டுமே சாத்தியப்படுத்தக்கூடிய சிறப்பான திட்டமாக இருந்தது என கடந்த அதிமுக ஆட்சியில் யாராலும் மறுக்க முடியாத சிறப்பான திட்டங்களை விளக்கி கூறி பேசினார்கள்.


ஆளுங்கட்சியின் மேடையிலேயே சிறப்பாக பேசப்படுகின்ற ஆட்சியாக அதிமுக ஆட்சியின் திட்டங்கள் இருக்கிறது என்றால் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தற்போதைய கழகப் பொதுச்செயலாளர் அவர்களும் சிறப்பான திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளனர் என்பது உண்மைதானே என்று பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் புதிதாய் கட்சியில் இணைந்தவர்களுக்கு நீங்கள் சரியான திசை நோக்கியும் ,சரியான இடத்தை நோக்கியும் வந்துள்ளீர்கள். அடுத்து அமைவது கழகப் பொதுச் செயலாளரின் பொன்னான ஆட்சி தான் என்று அதிமுக அரசின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.



நிகழ்ச்சியில்  மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகுமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவர் அணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

*/