கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே புவனகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் A.G.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி கழக செயலாளர் S.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் M. உமா மகேஸ்வரன் துவக்கவுரை நிகழ்த்தினார் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பினராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான A.அருண்மொழிதேவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் C.இராமநாதன். பொதுக்குழு உறுப்பினர் G.மணிகண்டன். மாவட்ட கழக இணைச் செயலாளர் செஞ்ச லட்சுமி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வளர்மதி ராஜசேகரன்.கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், கூட்டத்தின் முடிவு சேத்தியாதோப்பு பேரூராட்சி கழக செயலாளர் S.R.மணிகண்டன் நன்றியுரை கூறினார்.
- செய்தியாளர் சாதிக் அலி.

No comments:
Post a Comment