கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் 201 வது அவதாரதின விழா. அவரது பிறந்த இல்லத்தில் நடைபெற்றது. 1823 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி ராமையாபிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்த வள்ளலார் பிறந்ததிலிருந்து அவருக்குள் தன்னொளியாக வாழ்வியல் ஞானம் குடி கொண்டிருந்தது.
இதனையடுத்து மனித வாழ்வின் பல்வேறு தத்துவங்களை அறிந்து மனித வாழ்வியலுக்கு அதனை எடுத்துரைத்து வாழ்வியல் நெறிமுறைகளை உருவாக்கினார். அதில் இறைவன் எங்கும் ஜோதி வடிவாய் நிறைந்திருக்கிறார். உலகுக்கு ஜீவகாருண்யத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருந்திரலான பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்திற்கு பிறகு தொட்டிலில் வைக்கப்பட்ட வள்ளலாரின் குழந்தை வடிவ திருவுருவ சிலைக்கு தீபம் காட்டப்பட்டும் அணையா தீபத்தின் முன்பும் வழிபாடு நடைபெற்றது.
No comments:
Post a Comment