கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர் ஜீவா. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர்க்கும் முன் விரோதம் ஏற்கனவே இருந்து வந்துள்ளது, செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு செல்ல ஜீவா மேல்புளியங்குடி கிராம பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது அங்கே வந்த ஆனந்த் ஜீவாவிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்துச்சென்றார்.
அங்கு இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஜீவாவை ஆனந்த் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ஜீவா உயிரிழந்தார். பின்னர் போலீசாரால் அவரது உடல் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அவரது ஊருக்கு துக்ககம் அனுசரிக்க வந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளி ஆனந்த இன்னமும் கைது செய்யாமல், இருப்பதைக் கண்டித்து சாலை மறியல் செய்தனர்.
இதனால் ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் சாலையில் அரை மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களிடத்தில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் பிடிக்கப்பட்டு விடுவார் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் செய்தவர்கள் அதனை கைவிட்டு சென்றனர்.
No comments:
Post a Comment