கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் அருகே சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கழக கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும் குறுவை சாகுபடியினை காப்பீடு திட்டத்தில் சேர்க்காமலும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை கண்டித்தும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் (3.50) லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு (35.000) ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆ. அருண்மொழி தேவன் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ முருகுமாரன், முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் ஒன்றிய செயலாளர் ராஜாங்கம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், அகத்தியர் பவுண்டேஷன் தலைவர் டாக்டர். ஈஸ்வர் ராஜலிங்கம், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், நகரச் செயலாளர் மாரிமுத்து, நகர துணை செயலாளர் முஹம்மது இக்பால், நகர அவைத் தலைவர் மலை மோகன், கோ. ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் நன்றி கூறினார்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment