இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வீனோத் P செல்வம் மற்றும் சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் மாவட்ட பார்வையாளர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கடலூர் மாவட்ட தலைவர் மதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
இலவச பேருந்து வசதியை பெண்கள் முறையாக பயன்படுத்த முடியவில்லை, அனைத்து மகளிர்க்கும் பாரபட்சம் இன்றி ரூபாய் ஆயிரம் வழங்கி விடு, திராவிட ஆட்சியை ஒழிக்க அனைத்து மக்களும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment