பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகுமணி, கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட நிர்வாகி செஞ்சிலட்சுமி வரவேற்புரையாற்ற புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.என் சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் விநாயகமூர்த்தி, மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.கருப்பன் மற்றும் சேத்தியாத்தோப்ப முன்னாள்நகரச் செயலாளர் எஸ் கே நன்மாறன், சேத்தியாத்தோப்பு அதிமுக1-வதுவார்டு கவுன்சிலர் கே.பி.ஜி கார்த்திகேயன், ஜெயசீலன், வீரமூர்த்தி மற்றும் பல கிளைக் கழகஅதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புவனகிரி நகர கழக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புவனகிரி புதிய பாலத்தின் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அவரின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் நூற்றுக்கணக்கான அதிமுகவினரோடு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
No comments:
Post a Comment