வடலூர் SIL நிறுவனத்தில் பணிபுரிந்தோர் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் வடலூரில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 July 2023

வடலூர் SIL நிறுவனத்தில் பணிபுரிந்தோர் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் வடலூரில் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் (SIL) சேஷாய் இண்டஸ்ட்ரியல் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வந்தது இந்நிறுவனத்தில் சுமார் 1700 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர் இந்நிறுவனம் கடந்த 1991 ஆம் ஆண்டு நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அதில் வேலை செய்த பணியாளர்களை வெளியேற்றியது இந்நிலையில் SIL நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி ESI, PF, குரூப் இன்சூரன்ஸ், சொசைட்டி போனஸ் ஆகிய தொகைகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதனைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு இதில் வேலை செய்த 310 தொழிலாளர்கள் SIL பணிபுரிந்தோர் காண நல சங்கம் என்ற பெயரில் புதிதாக ஒரு சங்கத்தை தொடங்கியுள்ளனர், இச்சங்கத்தின் மூலம் அதே ஆண்டு நிலுவைத் தொகை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில் 3 1/2 கோடி ரூபாயை சங்கத்தில் உள்ள 310 நபர்களுக்கும் வழங்க கோரி தீர்ப்பு வெளியானது.


பின்னர் இது தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் முன்பு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் தொகையை நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இதனிடையே SIL நிறுவனம் கடந்த 2003 ஆம் ஆண்டு சுமார் 12 கோடி க்கு ஏலம் விடப்பட்டது இதன் நிலுவை 9 1/2 கோடி ரூபாய் தற்போது மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் SIL பணிபுரிந்தோர் நல சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பதரை கோடியை ரூபாயை பணியாளர்கள் அனைவருக்கும் பிரித்து உடனடியாக  வழங்க வேண்டும் என்று மேலும் ஒரு வழக்கு SIL பணிபுரிந்தோர் நல சங்கம் சார்பில் அண்மையில் தொடரப்பட்டது இந்த வழக்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் SIL புனிப்பரிபுரிந்தோர் நலச்சங்க தலைவர் அமலநாதன் தலைமையில் வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே நடைபெற்றது.


இதில் வழக்கு தொடர்பான விபரங்கள் மற்றும் விளக்கங்கள் சங்கத்தில் உள்ள நபர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது நிகழ்வில் சங்க செயலாளர், அன்பழகன், பொருளாளர் அருள்தாஸ், வழக்கறிஞர் குப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/