வீட்டில் பெண்கள் தக்காளி செடி வளர்க்க முன்வர வேண்டும் கூட்டுறவு பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நுகர்வோர் கடன் வழங்கும் முகாமில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பேச்சு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 July 2023

வீட்டில் பெண்கள் தக்காளி செடி வளர்க்க முன்வர வேண்டும் கூட்டுறவு பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நுகர்வோர் கடன் வழங்கும் முகாமில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பேச்சு.


கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் திட்டமான நாட்டுப்புற கலைஞர்கள் கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நுகர்வோர் கடன் மற்றும் வண்டி வாகன கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு விழா சிறப்புரையாற்றினார்.
 

மேலும் அமைச்சர் பேசுகையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் தமிழக முதல்வர் அவர்கள் மகளிக்கான  இலவச பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள்  மிகுந்த பயனடைந்து வருகின்றனர் மேலும் தமிழக முதல்வர் அவர்கள் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நலிவுற்ற நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு கடன் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்டத்தில் 112 நாட்டுப்புற கலைஞர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் 82 மாற்றுத்திறனாளிகள் 99 கைம்பெண்கள் 54 நபர்களுக்கு விவசாயம் சார்ந்த கடன் 1075 சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் உதவி போன்ற 8626 பயனாளிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது, மேலும் பெண்கள் தங்கள் வீடுகளில் தக்காளி செடிகள் மற்றும் கத்திரி வெண்டை போன்ற செடிகளை இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


நிகழ்ச்சியின் இறுதியில் பயனாளிகளுக்கு கடன் தொகை காண காசோலை வழங்கப்பட்டது, நிகழ்வில் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் இதர துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

*/