மஞ்சள் நீராட்டு விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு; நல்வாய்ப்பாக தப்பிய MLA. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 July 2023

மஞ்சள் நீராட்டு விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு; நல்வாய்ப்பாக தப்பிய MLA.


தமிழக - புதுச்சேரி மாநில எல்லை பகுதியான கடலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் மகள் மஞ்சள் நீராட்டு விழா நல்லாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன்  கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

மண்டபத்தினுள் நுழைந்த சில நொடிகளில் யாரோ மர்ம நபர்  மண்டபத்தை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினர் உடனடியாக சுதாரித்து கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் அவரை பத்திரமாக அழைத்து வந்தனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது உடனடியாக காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் சம்பவ இடத்திற்கு காவல் துறையினருடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மேலும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.


இச்சம்பவத்தை தொடர்ந்து  கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் வீட்டிற்கு ஏராளமான திமுக வினர் குவிந்தனர் இவர்கள் மத்தியில் பேசிய ஐயப்பன் என்னால் முடிந்த அளவு நிறைய பேருக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பல நலத்திட்டங்கள் வழங்கி வருகிறேன் இதனை பொறுத்து கொள்ள முடியாத தீயசக்திகள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுப்பட்டுள்ளனர் காவல் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார் மேலும் அவர் பேசுகையில் இது ஒரு வேதனையிலும் சோதனை காலகட்டமாக உள்ளது நான் எங்கே சென்றாலும் தனியாகத்தான் செல்வேன் ஏனென்றால் நான் நல்லதையே செய்கிறேன் யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்ததில்லை என்றும் நம்முடைய அரசுக்கு எவ்வித கலங்கமும் ஏற்ப்படுத்த கூடாது காவல் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் மீண்டும் கூறினார்.


அனைவரும் பத்திரமாக கலைந்து செல்லுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் முதல்வர் தளபதி உள்ளவரை என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது தயவுசெய்து அனைவரும் கலைந்து செல்லுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார் இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

*/