கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 1996 ஆண்டில் திமுக சார்பில் போட்டியிட்டு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குழந்தை தமிழரசன். மக்களின் நன்மதிப்பை பெற்றார். மேலும் கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து சிறந்த சட்ட மன்ற உறுப்பினராக திகழ்ந்தார்.
இவர் கடந்த 2020 ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். தற்போது விருத்தாசலம் நகர மன்ற தலைவராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர் சங்கவி முருகதாஸ் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. தன் தந்தையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வாசித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசிக்கும் ஆசை உள்ளவர்களுக்கு படிப்பதற்கு நூலகம் போல் இலவசமாக வாசிக்க அழைப்பு விடுவித்தார்.
7010442355 அலைபேசியை அழையுங்கள் புத்தகம் வீடு தேடி வரும் என்றும் விருத்தாசலம் 33 வார்டுகளில் உள்ள நகரவாசிகளுக்கு மட்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை படித்துவிட்டு ஒரு வாரத்தில் தந்து விடுங்கள் என்றும் படித்த புத்தகத்தைப் பற்றி சிறந்த விமர்சனம் எழுதிக் கொடுத்தால் திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்றும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கவிக்கும் பொருட்டு சிறு முயற்சி தான் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment