இந்நிலையில் கிராமப் பிரதான சாலையை சேதப்படுத்தும் விதமாகவும் பத்துக்கும் மேற்பட்ட ராட்சச சிமெண்ட் குழாய்கள் புதைப்பதற்கான நடவடிக்கைகள் என்எல்சி நிர்வாகம் இரவு நேரத்தில் யாருமறியாமல் என செய்வதை அறிந்த கத்தாழை, மும்முடிசோழகன், கரைமேடு ஆகிய மூன்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது புதிய பரவானாறு வாய்க்காலில் கட்டப்பட்டு வரும் பாலத்தை முழுமையாக கட்டி முடித்துவிட்டு பின்பு ராட்சச சிமெண்ட் குழாய்கள் புதைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.மேலும், எங்களின் பல மாத போராட்டத்திற்கான தீர்வான சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பற்றி என்எல்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித அக்கறையும் காட்டாமல் எங்களை அச்சுறுத்தும் விதமாகவும், மன உளைச்சல் ஏற்படும் விதமாகவும் பல்வேறு பணிகளை ஊர் உறங்கும் இரவிலும் செய்து எங்களது கோரிக்கைகளையும் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி வருகிறது.
இது போன்ற செயல்களை நிறுத்தாவிட்டால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டமாக சாலை மறியல் போராட்டம் செய்வோம் என்றுஎச்சரிக்கை விடுத்தனர். தற்போதைய சூழ்நிலையில் கத்தாழை, மும்முடி சோழகன், கரைமேடு ஆகிய கிராமங்களில் மக்களின் கோரிக்கையை முழுவதுமாக நிறைவேற்றி பின்பு எந்த பணியையும் தொடங்குங்கள் என்பது தான் எங்களது கோரிக்கை என்று தெரிவித்து கத்தாழை கிராமத்தில் இருந்த ராட்சச சிமெண்ட் குழாய்களின் மேல் ஏறி நின்று தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்புடன்காணப்பட்டது.
No comments:
Post a Comment